பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.
இதற்காக மத்திய அரசு சார்பில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 19 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வாக 4 ஆயிரத்து 466 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்திற்கு 19 ஆயிரத்து 208 கோடி ரூபாயும், பீகாருக்கு 10 ஆயிரத்து 845 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகை மாநிலங்களின் நிதிச் சுமையைக் குறைத்து, உள்ளூர் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
















