தேர்தல் களத்தில், தான் நேரடியாக போட்டியிடாததே தோல்விக்குக் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதுகுறித்து பேட்டியளித்த டிரம்ப், ஜனநாயக கட்சியினர் அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்காத வரை அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் எனக் கூறினார்.
எவ்வித காரணமும் இன்றி தன் மீது கண்டன தீர்மானம் கொண்டுவந்தால், அது ஜனநாயகக் கட்சிக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை ஏற்படுத்தி அக்கட்சியையே அழித்துவிடும் எனவும் தெரிவித்தார்.
இடைத்தேர்தலில், நேரடியாக தான் போட்டியிடாததே தோல்விக்குக் காரணம் எனக் கூறிய டிரம்ப், தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவையற்ற திட்டங்களைத் தடுத்து நிறுத்தப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
இதேபோல் தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், குடியரசு கட்சி தோற்றதற்கு ஈரான் போரே காரணம் என கூறினார். 2024-இல் டிரம்பை ஆதரித்த பல வாக்காளர்கள், ஈரான் உடனான மோதல் குறித்த விரக்தியில் குடியரசு கட்சியினரை கைவிட்டதாகவும் ஜனநாயக கட்சிக்கு வாக்களித்ததுதான் முக்கிய பிரச்னை எனவும் தெரிவித்தார்.
















