தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை, வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கோரிய நிலையில் மூன்று நாட்கள் மட்டுமே அனுமதி அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,
அதன்படி மூன்று நாட்கள் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்,
அப்போது அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்,
இதற்கிடையே போலீசார் காயப்படுத்தினார்களா, உணவு முறையாக வழங்கப்பட்டதா என அன்பில் மகேஷிடம் நீதிபதி சத்தியமூர்த்தி கேள்வி எழுப்பினார்,
இதற்கு பதிலளித்த அன்பில் மகேஷ், போலீசார் துன்புறுத்தவில்லை எனவும், உணவு முறையாக வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அன்பில் மகேஷை வரும் 6ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையே இவரது ஜாமின் மனு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.
















