கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார்.
பெருந்துறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்தை நோக்கி முதலமைச்சர் விஜய் சென்று கொண்டிருந்தார். அப்போது கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு வழக்குகளின் நிலை, புகார் மீதான நடவடிக்கைகள் குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், காவல்நிலையத்தில் லஞ்ச புகார் தொடர்பான விளம்பர பதாகையை ஏன் வைக்கவில்லை எனவும் முதலமைச்சர் விஜய் கேள்வி எழுப்பினார்.
முன்னதாக ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த தம்பதியின் குழந்தைக்கு விஜய் என முதலமைச்சர் பெயர் சூட்டினார். மேலும், தாய்மாமன் தங்க மோதிரத்தை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார்.
















