கோவையில் காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிய கைதியை இரண்டு நாட்களுக்குப் பிறகு போலீசார் கைது செய்தனர்.
கோவை அன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ராகவன் என்பவரை நீதிமன்ற காவலுக்காக கோவை மத்திய சிறைக்கு போலீசார் அழைத்து சென்றனர். சிறைவாசலில் கைவிலங்கு அகற்றப்பட்டபோது, விசாரணை கைதி காவலர்களைத் தள்ளிவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இதனை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கோவை மத்திய சிறையிலிருந்து தப்பியோடிய கைதி ராகவனை சத்தியமங்கலம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
















