ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு - பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!
Nov 2, 2026, 03:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 2, 2026, 02:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தென்கொரிய நிறுவனங்களின் ஆயிரத்து 614 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், தவெக அரசின் கவனக்குறைவால் ஆந்திர மாநிலத்திற்கு கைமாறியுள்ள சம்பவத்திற்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது குறித்து பாஜக மாநில தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் தென் கொரியா விநியோகஸ்தர்களான ஹ்வாஷின், சியோயான் மற்றும் இவாமெட் ஆகிய நிறுவனங்களுடன் முந்தைய திமுக அரசு பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும், தற்போது இந்த மூன்று நிறுவனங்களும் ஆந்திரப் பிரதேசம் அனந்தபுரத்தில் இதே தொழிற்சாலைகளை தொடங்க ஆந்திர அரசுடன் மொத்தம் ஆயிரத்து 614 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிறுவனங்களின் மனமாற்றம் குறித்த கேள்விகளுக்கு தமிழக அரசின் ஒருங்கிணைப்பு முகமையான ‘கைடன்ஸ்’ பதிலளிக்கவில்லை எனவும், விரைவாகவும், உயர் மட்டத்திலான தொடர்புகளை மேற்கொண்டதாலும் தமிழகத்தை பின்னுக்கு தள்ளி மேற்கண்ட நிறுவனங்களின் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் ஆந்திர மாநிலம் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

சுலபமாக வந்திருக்க வேண்டிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகள் நழுவியதை ​​தமிழகத்தின் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும்,  தொடர்புடைய நிறுவனங்கள் தமிழகத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற நிலையிலும், கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு ஆந்திராவிடம் பறிகொடுத்ததற்கு தவெக அரசு வெட்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள பதிவில், பொருளாதார வளர்ச்சியில் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும்,

ஜிஎஸ்டி வரி வருவாயில் தமிழ்நாடு வெறும் 3 சதவீத வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது கவலை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாக காண வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BJP condemnedSouth Korean companiesKIAAndhra PradeshDMK governmentHyundaiTVK government
Share
Tweet
SendShare
Previous Post

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

Related News

சேலத்தில் திமுக கவுன்சிலர், மாநகராட்சி ஆணையர் மோதல்; கைகலப்பு

முரசு புயல் எதிரொலி – சென்னையில் 11 விமானங்கள் ரத்து!

சென்னையில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் – மதுப்பிரியர்கள் சாலை மறியல்!

இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பதவிக்கு 5 கோடி பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி – எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்பு!

அரசின் செயல்பாடுகளில் மக்கள் பங்களிப்பு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவுக்கு கைமாறிய தென்கொரிய நிறுவனங்களின் ரூ. 1614 கோடி முதலீடு – பாஜக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம்!

முரசு புயல் பாதிப்பு – தமிழக முதல்வரிடம் உதவி கோரினார் ஆந்திர முதல்வர்!

ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது முரசு புயல் – சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்!

கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.

அரசியலுக்காகவே இலவசங்கள் வழங்கப்படுகின்றன; ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

பேனர் வைப்பதில் தகராறு;விசிக பிரமுகர் வெட்டிக் கொலை

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies