அரசின் செயல்பாடுகளில் சமூகத்தின் பங்களிப்பும், மக்கள் பங்கேற்பும் மிகவும் அவசியம் என, தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ”தமிழ்நாடு தினம்” விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இஸ்ரோ தலைவர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கிவைத்தனர். இந்நிகழ்ச்சியில் மெட்ராஸ் வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு, இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல், ராம்கோ சிமெண்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் ஆளுநராக இருப்பதில் பெருமை கொள்வதாகத் தெரிவித்தார். அரசியல் காரணங்களுக்காக இலவசப் பொருட்களையும் திட்டங்களையும் அறிவிப்பது ஒரு போக்காக மாறியுள்ளதாக குறிப்பிட்டார். நாட்டின் நிர்வாகத்திலும் வளர்ச்சிப் பணிகளிலும் மக்கள் நேரடியாகவும் முனைப்புடனும் பங்கேற்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
















