ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நவம்பர் 2 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூறாவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே உள்பட நாடு முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
கடந்த ஓராண்டில் புதிதாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினசரி கிளை கூட்டங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அமைப்பு ரீதியிலான அடுத்தகட்ட விரிவாக்கம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல், சுதேசி கொள்கைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பஞ்ச பரிவர்த்தன்’ திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது குறித்தும், போதை பழக்கத்தைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்தும் இந்த மூன்று நாள் மாநாட்டில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
















