தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி - சுவை தொகுப்பு!
Oct 31, 2026, 07:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 31, 2026, 06:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளியையொட்டி புதுக்கோட்டையில் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. மைதா, வெள்ளைச் சர்க்கரை உள்ளிட்டவற்றைத் தவிர்த்து தயாரிக்கப்படும் இந்தப் பலகாரங்களுக்கு மக்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்தச் செய்தித் தொகுப்பில்…

1,364 இயற்கை விவசாயிகளை உள்ளடக்கிய புதுக்கோட்டை இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி ரகங்களைக் கொண்டு, விதவிதமான பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக வரகு, தினை, சாமை, கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களையும், மாப்பிள்ளைச் சம்பா, கவுனி, தூயமல்லி போன்ற பாரம்பரிய அரிசி வகைகளையும் கொண்டு இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான சுவையில் பலகாரங்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த ஆண்டு புதுவரவாக, பாரம்பரிய அரிசி வகையான ரத்தசாலி அரிசியைக் கொண்டு முறுக்கு, தட்டை, மிக்சர், லட்டு, ரிப்பன் பக்கோடா உள்ளிட்ட பலகாரங்களை வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இனிப்பு வகைகளில் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரை, வெல்லம், கருப்பட்டி போன்றவற்றைப் பயன்படுத்துவதாகவும், செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகள் சேர்க்காமல், தரமான மூலப்பொருட்களைக் கொண்டு பலகாரங்கள் தயாரிப்பதாகவும் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்…

இந்தத் தீபாவளிக்கு, கடந்த ஆண்டைவிட சுமார் 20 சதவீதம் கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளதாகவும், மூலப்பொருட்களின் விலை உயர்வு விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஸ்வீட் தயாரிப்பில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், இயற்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கும் சந்தை வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆன்லைன் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆர்டர் வருவதாக கூறும் நிர்வாகிகள், தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் பலகாரங்களை அனுப்பி வருகின்றனர்.

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி வகைகளைக் கொண்டு பலகாரங்கள் தயாரிப்பதன் மூலம், நமது பாரம்பரிய உணவுப் பழக்கத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது புதுக்கோட்டை இயற்கை வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கம். இந்த முயற்சி, நமது பாரம்பரிய உணவுகளை மீட்டெடுப்பதோடு, இயற்கை விவசாயிகளின் உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தையும், அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

..

Tags: traditional rice varietiesdeepavali 2026deepawali 20262026 deepawalideepavali date 2026deepawali deepavali light up 2026Deepavali sweetsPudukkottai Organic Farmers Producers Association
Share
Tweet
SendShare
Previous Post

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

Next Post

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Related News

வங்கக் கடலில் மீண்டும் புயல் ?; ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!

இண்டி கூட்டணி பேரணியை வேறு தேதிக்கு மாற்றுக; வியாபாரிகள் வேண்டுகோள்

மயிலாடுதுறை – தரங்கம்பாடி ரயில் பாதை விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி – மா.வெங்கடேசன் தகவல்!

சர்தார் வல்லபாய் பட்டேல் 151வது பிறந்தநாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

தமிழகத்தில் அடுத்தாண்டு கோடை காலத்தில், மின் தேவை எவ்வளவு? விவரங்களை வெளியிட்டது மத்திய மின்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளி பலகாரங்களில் புதுமை : முறுக்கு முதல் லட்டு வரை சிறுதானியங்களில் விதவிதமான ருசி – சுவை தொகுப்பு!

திமுக ஆட்சியில் நகராட்சி துறை ஊழல் பணம் டிவி நடிகைகளின் வங்கி கணக்கிற்கு மாற்றம்? – லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் உள்ள ஈ.வெ.ராமசாமி சிலையை அகற்ற வேண்டும் – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

என்டிஏ மீது மக்களுக்கு நம்பிக்கையும், ஆதரவும் அதிகரித்தள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் வறுமை கோட்டில் இருந்து மீண்டுள்ளவர்களின் எண்ணிக்கை உயர்வு – உலக வங்கி

வெற்றிப் பயணத் திட்டத்தில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை அதிகரிப்பு – போக்குவரத்து துறை விளக்கம்!

நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் – பிரதமர் மோடி

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட என்விஎஸ்-03 செயற்கைகோள் : ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பு 5 ஆண்டுகள் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies