அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, குரூப் -1 தேர்வில் பொதுப்பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 32-லிருந்து 37ஆக உயர்த்தப்படுவதாகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37-லிருந்து 42-ஆகவும் உயர்த்தப்படுகிறது.
அதேபோல, குரூப் -1 தேர்வில் மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 42-லிருந்து 47ஆகவும், ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47-லிருந்து 52-ஆகவும் உயர்த்தப்படுகிறது.
இதையடுத்து, குரூப் -2 மற்றும் 2A தேர்வில் பொதுப்பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 30-லிருந்து 35ஆக உயர்த்தப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளில் பொதுப்பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 40-லிருந்து 45ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேபோல, ஒதுக்கீட்டு பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது உச்ச வரம்பு இன்று முதல் 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
















