போதைப்பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்க மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொன்விழா மற்றும் 39-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போதுபிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்கு பார்வைக்கு கிராமப்புற வளர்ச்சியே முதன்மைத் தூணாக உள்ளதாகத் தெரிவித்தார். பிரதமர் மோடி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிலிருந்து மீட்கப்பட்டு புதிய வாழ்வை அடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உலகை வேகமாக மாற்றி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும், நவீன தொழில்நுட்பங்களை விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். இளைய தலைமுறையினர் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும் எனவும் சி.பி.ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
















