சாத்தான்குளம் அருகே தான் காதலித்த சிறுமியின் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவத்தில் தாய் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் காதல் விவகாரத்தில் சிறுமியின் வீட்டிற்குள் புகுந்து, தந்தை முத்துக்கிருஷ்ணன், தாய் ரெஜிலா, சகோதரர் ஆகியோரை ஞானபிரகாஷ் என்பவர் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினார். இந்தத் தாக்குதலில் ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் அவரது மகன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், முத்துக்கிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் ஏற்கெனவே ஞானபிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















