சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் மீது வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அன்பில் மகேஷை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தபோது, அங்கு வந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி கலாநிதி வீராசாமி ஆகியோர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான காணொளிகளும் சமூக வலைதளங்களில் பரவின. இதனை அடுத்து, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ள வேப்பேரி போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















