காவிரி நீர் திறப்பு விவகாரத்தில், கர்நாடகா உரிய அளவு தண்ணீர் திறக்கவில்லை எனக் கூறி, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், கர்நாடகா அக்டோபர் 24 முதல் நவம்பர் 6-ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், குறைந்த அளவே நீர் திறக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை ஈடுசெய்ய 3 ஆயிரத்து 851 கன அடி நீரை வழங்கவும், நவம்பர் 6-ம் தேதி வரை தினமும் 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பதை உறுதிசெய்யவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
















