செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு தொடர்பாக தாய் மற்றும் அவரது அக்காவிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
ஆலம்பூண்டியில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில், அவரது தாய் பவானி மற்றும் அக்கா விஜயலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் மூன்றாவது முறையாக விசாரணை நடத்தினர். இதில், சிறுமியின் அக்கா விஜயலட்சுமியை தனி அறையில் வைத்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. 6 நாட்களாக விசாரணை மேற்கொண்டு வரும் சிபிசிஐடி போலீசார் சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்
















