முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டதற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சட்டம் ஒழுங்கின் அவலட்சணம், நிர்வாக சீர்கேட்டை மக்களின் கவனத்தில் இருந்து திசைதிருப்ப தவெக அரசு நினைக்கிறது என குற்றம் சாட்டியுள்ள ஸ்டாலின்,
கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தை திசை திருப்பி தப்பித்துக் கொள்ளலாம் என நினைக்கும் தவெக அரசின் எண்ணம் ஈடேறாது என குறிப்பிட்டுள்ளார்.
















