சென்னையில் 7 இடங்களில் நடைபெற்ற அணிவகுப்புப் பேரணியில், பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க நூற்றுக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் பங்கேற்று அணிவகுத்துச் சென்றனர். குறிப்பாக எழும்பூர், பெரம்பூர் அகரம் சந்திப்பில் நடைபெற்ற அணிவகுப்புப் பேரணியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புப் பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஊர்வலமாகச் சென்றனர். இதில், சிறப்பு விருந்தினர்களாக பாலமுருகன் மற்றும் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு நிர்வாகி சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.
















