புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரள ஏலத் தோட்டங்களுக்குச் சென்ற தொழிலாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட ஏலத் தோட்டங்களுக்குக் கூலி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களை போடி முந்தல் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
போடி, போடி மெட்டு மற்றும் இடுக்கி மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பாதுகாப்பு கருதி தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களில் வரும் தொழிலாளர்களைத் தடுத்து நிறுத்துவதுடன், பேருந்துகளில் வருபவர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி வழங்கி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















