ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு
Oct 25, 2026, 09:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

Manikandan by Manikandan
Oct 25, 2026, 08:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐரோப்பாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாகவும், கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்குக் குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்கும் இரண்டாவது பெரிய நாடாகவும் இந்தியா வளர்ந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கான பாதுகாப்பு வெடிமருந்துகள் ஏற்றுமதி 1600 சதவீதம் அதிகரித்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி பலமடங்கு அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் 16 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே ஆயுத தளவாடங்களை உற்பத்தி செய்துவந்த நிலையில் தற்போது தனியார் நிறுவனங்களும் இந்திய பாதுகாப்புத் துறைக்கு ஆயுதங்களை உற்பத்தி செய்து வழங்குகின்றன.

840-க்கும் மேற்பட்ட பெரிய தனியார் நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான சிறு. குறுந் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என நாட்டின் பாதுகாப்பு உற்பத்தித் துறை வேகமாக வளர்ந்துள்ளது. இந்த உற்பத்தித் திறனால் நாட்டின் பாதுகாப்பு ஏற்றுமதி பலமடங்கு அதிகரித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பிறகு, உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் ஆயுதங்களை அந்நாட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதன் காரணமாக தீர்ந்து போன தங்களின் ஆயுதக் கிடங்குகளை மீண்டும் நிரப்புவதற்காக ‘Rearm Europe’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தன.

இந்தத் திட்டத்தின் கீழ் ஏற்பட்ட அதீத தேவையே இந்தியாவின் ஐரோப்பிய ஆயுத ஏற்றுமதி அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

இந்தியா, ஐரோப்பாவிற்குப் போர் விமானங்களையோ, அதிநவீன ஏவுகணைகளையோ ஏற்றுமதி செய்யாமல் தரைவழிப் போருக்குத் தேவையான மிக அடிப்படையான பீரங்கி குண்டுகள் வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களையே ஏற்றுமதி செய்து வருகிறது.

உக்ரைன் போர் தொடங்குவதற்கு முந்தைய 4 ஆண்டுகளில், 49.2 மில்லியன் டாலராக இருந்த ஆக ஐரோப்பாவிற்கான இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி, உக்ரைன் போர் தொடங்கிய பிந்தைய 4 ஆண்டுகளில் இது 872 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 1,600 சதவீத வளர்ச்சியாகும். 7 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிமருந்துகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

மேலும் இந்தியாவின் மொத்த பாதுகாப்பு ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய சாதனை அளவாக 38,424 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்பு ஏற்றுமதி 63 சதவீதம் அதிகரித்து 4 பில்லியன் டாலரை எட்டியுள்ளது

இந்த எண்ணிக்கை, 2023-ஆம் ஆண்டிற்கான இலக்கை விட இருமடங்கிற்கும் அதிகமாகும். மேலும், பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சுமார் 25 மடங்கு அதிகமாகும்.

இந்தியாவிலிருந்து இத்தாலி, செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ஆயுத தளவாடங்கள் மூன்றாம் தரப்பு நாடுகள் வழியாக உக்ரைன் ராணுவத்தின் கைகளுக்குச் சென்றடைவதாக கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு இந்திய வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் செல்வது குறித்து தனது கவலையை ரஷ்யா, மத்திய அரசிடம் நேரடியாக இரண்டு முறைக்கு மேல் எழுப்பியிருந்தாலும் யூகங்களின் அடிப்படையிலான தவறான கருத்துக்களை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்தியா, சர்வதேச ஆயுத ஏற்றுமதி விதிகளை முறையாகப் பின்பற்றுவதாகவும், உக்ரைனுக்கு நேரடியாக எந்த ஆயுதங்களையும் ஏற்றுமதி செய்யவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக உக்ரைன் போருக்குப் பிறகுதான் இந்தியா-ரஷ்யா இடையேயான பொருளாதார உறவு முன்பை விட மிகவும் வலிமையாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருகாலத்தில் ஆயுதங்களை இறக்குமதி மட்டும் செய்து வந்த இந்தியா, பிரதமர் மோடியின் MADE IN INDIA மற்றும் பாதுகாப்புத் துறையிலும் தன்னிறைவு சுயசார்பு பாரதம் ஆகிய இலட்சியத்துடன் சர்வதேச அளவில் ஒரு முக்கிய ஆயுத ஏற்றுமதியாளராக நிமிர்ந்து நிற்கிறது.

Tags: Indiaincreasedefence export
Share
Tweet
SendShare
Previous Post

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Next Post

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies