வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் நாளை அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர் மற்றும்
பெரம்பலூர், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலிலும்
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம் மற்றும்
தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 17 மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் நெல்லை மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
















