டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க, நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடைமுறை அமலுக்கு வரவுள்ளது.
டாஸ்மாக்கில் நவம்பர் 1-ஆம் தேதி முதல், ஒரே விற்பனையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மதுபானம் வாங்கினால், மின்னணு பரிவர்த்தனை மூலம் மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல், இந்த வரம்பு 500 ரூபாய்க்கு குறைக்கப்படுகிறது. அதன்படி, மது பிரியர்கள் யுபிஐ, கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்த நேரிடும்.
மேலும், மதுபானம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முறையாக ரசீது வழங்க வேண்டும் என்றும், மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விலையை விடக் கூடுதலாகத் தொகை வசூலிக்கக் கூடாது என்றும் டாஸ்மாக் கடைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















