முதல்வர் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசிய விவகாரத்தில் தலைமறைவாக உள்ள திமுக கவுன்சிலர் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை கைது செய்து புழல் சிறைக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது, வேலூர் திமுக கவுன்சிலர் சரவணன் முதல்வர் குறித்து வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில், தலைமறைவாக உள்ள சரவணணை மூன்று தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
















