முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் 4 மணி நேரம் விசாரணை நடைபெற்றது
சென்னையில் கடந்த மாதம் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எம்.பி ஆ.ராசா மற்றும் முன்னாள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் இருவரும் ஆஜரான நிலையில் சுமார் 4 மணி நேரமாக போலீசார் தீவிர விசாரணையை நடத்தினர்
இதில் அவதூறு பேச்சு குறித்து ஆ. ராசாவிடம் 120 கேள்விகளும், மா. சுப்பிரமணியனிடம் 70 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி ஆ.ராசா முதலமைச்சர் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
அதில் சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு உள்ளிட்டவற்றை மூடி மறைப்பதற்காகவே விசாரணை நடத்தப்படுகிறது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் கைதிகள் தப்பித்தது தவெக அரசு நடத்தும் நாடகம் எனவும் விமர்சனம் செய்தார்.
















