தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசிதழில், மாநிலம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சமாக 1.8 கிலோமீட்டர் தூரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும்,
கூடுதலாக ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை வழக்கமான கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கூடுதகட்டணம் வசூலிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், காத்திருப்புக் கட்டணமாக ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















