கர்நாடகா, உத்தரப்பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்களில் வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவில் எதிர்க்கட்சியான பாஜக- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி போட்டியிட்ட நான்கு இடங்களையும் கைப்பற்றியது. காங்கிரஸ் வசமிருந்த பெங்களூரு சட்ட மேலவைத் தொகுதியையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது. ஆசிரியர்களும், பட்டதாரிகளும் வாக்களித்த இந்தத் தேர்தல், கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாரின் தலைமைக்கு விடப்பட்ட சவாலாக கருதப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜகவும், சமாஜ்வாடி கட்சியும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. அங்கு காங்கிரஸ் எந்தவொரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. பீகாரில் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. அங்கும் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
















