சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சி.எஸ்.ஐ பள்ளி வளாகத்தில் வசித்து வந்த ஈஸ்வரன் என்பவர் தனது மனைவி மல்லிகாவுடன் வசித்து வந்தார்; இந்நிலையில் இன்றைய தினம் வீட்டில் தனியாக இருந்த மல்லிகாவை கழுத்தறுத்து கொலை செய்த நபர்கள் அவர் அணிந்திருந்த கம்மல்களை திருடிச் சென்றனர்
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்.
மேலும், கொலைக்கான காரணம், நகைக் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு நகை திருடப்பட்ட நிலையில் அதே மாதிரி மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது
















