நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன முறைகேடு மற்றும் ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சம்மன் அனுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட 8 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோவை, நாமக்கல், நெல்லை உள்ளிட்ட 25 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், வழக்கு தொடர்பான 170 ஆவணங்கள் மற்றும் 13 மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மின்னணு ஆதாரங்கள் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகள் முடிந்ததும், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்ட வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















