சர்தார் வல்லபாய் பட்டேலின் 151வது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் அவரது படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் படேல் சௌக் என்ற இடத்தில் அவரது படத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையொட்டி, குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான ஒற்றுமைக்கான சிலையான படேலின் சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர் தூவப்பட்டது. தொடர்ந்து, தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்ற பிரதமர், ராணுவம் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.
சென்னை மக்கள் மாளிகை அருகே உள்ள சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட படத்திற்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மாலை மணிவித்து மரியாதை செலுத்தினார்.
















