நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தன்னை பழிவாங்குவதே எதிர்க்கட்சிகளின் திட்டம் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மேற்காசிய போர் பதற்றத்தைப் பயன்படுத்தி உரம் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்பியதாக விமர்சித்தார்.
விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதாகவும் சாடினார். சர்வதேச சந்தையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் யூரியா மூட்டை, இந்திய விவசாயிகளுக்கு 300 ரூபாய்க்கும் குறைவாக வழங்கப்படுவதாகவும், டிஏபி உரம் 1,350 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது கடைசி மூச்சு வரை நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவேன் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
















