மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழா மியான்மர் நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
யாங்கூன் நகரத்தில் உள்ள இந்தியா சென்டரில் தமிழ் உலகம் அமைப்பும், இந்தியத் தூதரகமும் இணைந்து மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். இதில் இந்தியத் தூதர் அபே தாகூர் மற்றும் மியான்மர் வாழ் தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் இணைந்து குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
அகண்ட தமிழ் உலகத்தின் அமைப்பாளர் வீ. சேகர் வரவேற்புரை ஆற்றிய நிலையில் SVCC மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து மகாகவி பாரதியாரின் வரலாறு மற்றும் நாட்டுப்பற்று உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
















