ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!
Nov 1, 2026, 08:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 1, 2026, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

காணாமல் போன 48 மணிநேரத்துக்குள் வங்கதேச விமானப்படையின் முன்னாள் லெப்டினன்ட் கே. எம். தஹ்சிஃப் சௌரியின் உடல் டாக்காவில் உள்ள துராக் நதியிலிருந்து மீட்கப் பட்டுள்ளது. சோரியின் மரணம் ஒரு திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டங்களின் விளைவாக அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நாட்டை விட்டு தப்பியோடியதை வீடியோ எடுத்து 28 வயதான Tahsif Souri தஹ்ஸிஃப் சௌரி சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ வெளியானதில் இருந்தே தஹ்ஸிஃப் சோரி பல்வேறு அச்சுறுத்தல்களையும், உளவுத்துறை கண்காணிப்புகளையும் எதிர்கொண்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தீவிரவாத இஸ்லாமிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமியுடன் தொடர்புடைய அமர் தேஷ் என்ற செய்தித்தாள், கடந்த ஆண்டு வங்கதேச விமானப்படையின் முன்னாள் லெப்டினன்ட் தஹ்சிஃப் சௌரியை இந்தியாவின் வெளிநாட்டு உளவுத் துறையான RAW-வின் உளவாளி என்று குற்றம் சாட்டியது.

இதனையடுத்து வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அரசு கவிழ்ந்த சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு, வங்க தேச விமானப் படையிலிருந்து தஹ்சிஃப் சௌரி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

மேலதிக விசாரணைகள் முடியும் வரை அவரது பாஸ்போர்ட் அரசால் பறிமுதல் செய்யப்பட்டது. குறிப்பிட்ட வீடியோவைப் பகிர்ந்ததாகவும் தன்னை RAW உளவாளி என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் தஹ்சிஃப் சௌரி பதிலளித்திருந்தார்.

குறிப்பாக விமான லெப்டினன்ட் ரிஃபத் அஷ்ரஃபி ஹசீனா தப்பிச் செல்லும் வீடியோவைப் பதிவுசெய்து பரப்பியதாக குறிப்பிட்ட தஹ்சிஃப் சௌரி,அந்த வீடியோவை தான் எடுத்ததாகவோ சமூக ஊடகங்களில் பரப்பியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியிருந்தார்.

வங்க தேச விமானப்படைக்குள் RAW-வின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மிகவும் அபத்தமானவை என்று கூறி நிராகரித்த அவர், தனக்கு அத்தகைய தொடர்பு எதுவும் இல்லை என்று முப்படைகளின் மக்கள் தொடர்பு இயக்குநரகம் கூறியதாக தெரிவித்திருந்தார்.

விமானப்படையில் இருந்து தனது பணிநீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை என்றும், எதிர்காலத்தில் செய்வேனா என்பது பற்றி தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றும் கூறியிருந்தார். பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டதும் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட்டை மீட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த ஜூலை மாதம், மற்றொரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சௌரி ஒரு உன்னத நோக்கத்திற்காக இறப்பதை விடப் பெரிய பெருமை வேறில்லை என்றும் மேலும் நாட்டிற்காக இறப்பதை விடப் பெரிய நோக்கம் இருக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 27ம் தேதி மாலை தனது நண்பர் ஒருவரின் அழைப்பை ஏற்று வீட்டை விட்டு வெளியேறிய சௌரி கடந்த புதன்கிழமை அதிகாலை சுமார் 1:30 மணியளவில், தான் வீட்டிற்குத் திரும்பி விடுவதாகத் தனது தாய்க்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாக்காவில் உள்ள துராக் நதி அருகே அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்றும், இருப்பினும் மூக்கிலிருந்து இரத்தம் வழிந்ததாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கும் ஷேக் ஹசீனா தப்பியோடிய வீடியோவிற்கும் இடையே உள்ள
தொடர்பு குறித்து தற்போதைக்கு எந்த ஆதாரமும் இல்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச உள்துறை அமைச்சர் சலாவுதீன் அகமது இது பற்றிக் கூறுகையில், “முறையான ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழு விவரங்களையும் கூற முடியும்” என தெரிவித்துள்ளார்.

Tags: premeditated murderSheikh Hasina fleeing videoformer Bangladesh Air Force Lieutenant K. M. Tahsif SouriSheikh HasinaDhakaK. M. Tahsif Souri body recoveredTurag River
Share
Tweet
SendShare
Previous Post

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

Related News

இஸ்ரேல் தேர்தல் ; பெரும்பான்மை பெறாத கட்சிகள்; அடுத்து என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர மாநில உள்ளாட்சி தேர்தலில் வன்முறை – வாகனங்களுக்கு தீ வைப்பு. பதற்றம்!

தமிழ்நாடு தினம் – பிரதமர் மோடி, முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

பெண்கள், குழந்தைகள் தொடர்பான குற்ற வழக்குகளை விசாரிக்க 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் – முதல்வர் விஜய் உத்தரவு!

மகாகவி பாரதியார் பிறந்தநாள் – மியான்மரில் உற்சாக கொண்டாட்டம்!

தமிழ் மொழியால் அரசியல் தலைவர்கள் வளர்ந்தார்களே தவிர, தமிழை வளர்க்கவில்லை – ராம ஸ்ரீநிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

ஷேக் ஹசீனா தப்பிய வீடியோவை எடுத்த வங்கதேச விமானப்படை அதிகாரி மர்ம மரணம் : சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் விடுமுறையுடன் தீபாவளி போனஸ் – ராயல் என்ஃபீல்டு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க அரசிடம் தொலைநோக்கு திட்டம் இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கான சுங்கவரி விலக்கு – இரு மாதங்கள் நீட்டிப்பு!

டெல்லியில் இண்டி கூட்டணி பேரணி – தீபாவளி வியாபாரம் பாதிக்கப்படும் என வணிகர்கள் கவலை!

தேர்தல் ஓட்டு திருட்டு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தயாரா? – ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்!

ஆர்.எஸ்.எஸ் இந்திய செயற்குழு கூட்டம் – இந்தூரில் நவம்பர் 2ம் தேதி தொடக்கம்!

தேசிய ஒற்றுமை தினம் : குஜராத்தில் பிரமாண்ட அணிவகுப்பு, பிரதமர் தலைமையில் உறுதி மொழி ஏற்பு!

வாரணாசி – டெல்லி ஸ்லீப்பர் ரயில் தொடக்கம்; தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ்

ஆந்திரா மாணவிக்கு நேர்ந்த கொடூரம்; நடந்தது என்ன ?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies