புயல் பாதிப்பைத் தொடர்ந்து, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு, மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க உதவி கோரினார்.
ஆந்திர மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு, முரசு புயலின் தாக்கத்தால் ஏற்படப்போகும் மின்வழித்தட பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் மின் கம்பங்கள் வரை சேதமடைய வாய்ப்புகள் இருப்பதாகவும், மின் விநியோகம் கடுமையாக பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிப்புகள் ஏற்பட்டால் 48 மணிநேரத்திற்குள் சீரமைத்து, உடனுக்குடன் மின் விநியோகத்தை சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்க தமிழக அரசிடம் உதவி செய்யக் கோரி, தமிழக முதலமைச்சர் விஜய்யை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
முரசு புயல் காரணமாக ஏராளமான மின்கம்பங்கள் சேதமடையும் நிலை உள்ளதால், மின் விநியோகத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்குத் தேவையான பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை அனுப்பி உதவுமாறு கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு தமிழக முதலமைச்சர் சாதகமாக பதிலளித்ததாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
















