வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயல், ஆந்திராவில் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நேற்று உருவான புயலுக்கு இந்தியா பரிந்துரைத்த ‘முரசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல், மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் தீவிரப் புயலாக வலுப்பெற்றது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் -நர்சாபுரத்திற்கு இடையே முரசு புயல் இன்று நள்ளிரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் கரையைக் கடக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அப்போது, மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, திருவள்ளூரில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
















