கோவையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியில், முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன், சீருடையில் பங்கேற்றார்.
கோவை குறிச்சி அடுத்த சுந்தராபுரம் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.
குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியில் தொடங்கிய பேரணி, சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்றது. முன்னாள் மத்திய அமைச்சர் எல்.முருகன் சீருடை அணிந்து பங்கேற்று தொண்டர்களுடன் அணிவகுத்துச் சென்றார். சுந்தராபுரம் பிரதான சாலையைக் கடந்து சென்ற பேரணி, மச்சம்பாளையம் வாரச்சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.
















