முரசு புயல் எச்சரிக்கை மற்றும் மோசமான வானிலை காரணமாக சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் மோசமான வானிலை நிலவுவதால், சென்னையிலிருந்து புறப்படவிருந்த 5 விமானங்களும், வரவிருந்த 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையிலிருந்து திருச்சி, கடப்பா, ராஜமுந்திரி, விஜயவாடா வரை இயக்கப்படவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தகவல்களுக்கு பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
















