தமிழகத்தில் தீபாவளி திருநாளில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு நேர கட்டுப்பாடு விதித்துள்ளது.
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும் என்றும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
















