தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்ளுக்கு போனஸ் வழங்கப்பட உள்ளது எனவும், இதில் 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 11.67 சதவீதம் கருணைத் தொகை அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக 16 ஆயிரத்து 800 ரூபாய் போனஸ் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. போனஸ் நிதி, மாவட்ட மேலாளர்களின் செயல்பாட்டுக் கணக்குக்கு இன்று அனுப்பி வைக்கப்படும் எனவும், நிதி ஒதுக்கப்பட்ட உடனே தாமதமின்றி பணியாளர்களின் வங்கிக் கணக்கில் போனஸ் தொகையைச் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், போனஸ் வழங்கிய பிறகு உபரிநிதி மீதமிருந்தால், அதனை அலுவலகத்தின் இதர செலவீனங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், நிதி போதவில்லை எனில், மாவட்ட மேலாளர் அல்லது கிடங்கு கணக்கில் உள்ள இருப்பில் இருந்து பற்றாக்குறையை ஈடு செய்து போனஸ் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
















