புனே மெட்ரோவின் 3வது வழித்தட பிங்க் லைன் பாதையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
புனேவில் 8,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பிங்க் வழித்தட மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
23 கிலோமீட்டர் கொண்ட இந்த மெட்ரோ ரயில் வழித்தடம், ஹிஞ்சேவாடி தகவல் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் சிவாஜி நகரை இணைக்கிறது. மேலும், 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதன் மூலம் புனே நகரின் போக்குவரத்து வசதிகள் விரிவடைந்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவில், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
















