12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவிக்கு தங்க நெக்லஸ் அணிவித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டினார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10, 11, 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவிகளை தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கடந்த மூன்று ஆண்டுகளாக சந்தித்து, பாராட்டி வருகிறார்.
அந்தவகையில், 2025-26ம் கல்வியாண்டில் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை நேரில் அழைத்துப் முதலமைச்சர் விஜய் இந்த ஆண்டும் பாராட்டுகிறார்.
முதற்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகளை சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை நீலாங்கரையில் பாராட்டு விழா நடைபெற்றது.
12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூரைச் சேர்ந்த மாணவி ரிக்சிதாவிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய், தங்க நெக்லஸ் அணிவித்து பாராட்டினார். இந்த பாராட்டு விழாவில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, வெங்கடரமணன், ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து 180-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பாராட்டுச் சான்றிதழுடன் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்.
















