தீபாவளி பண்டிகையை ஒட்டி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பயணிகளுக்கு, 16 இடங்களில் பேருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தீபாவளி பண்டிகை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகத்தில், அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், துறை செயலாளர், போக்குவரத்து கழக மேலான் இயக்குநர்கள், SETC அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தீபாவளி அன்று பயணிகள் சொந்த ஊருக்கு செல்வேண்டி உள்ளதால் பயணிகள் எந்த சிரமும் இல்லாமல் பயணிக்க அதிகாரிகள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது என்றார்
மேலும் ஆயுதபூஜை பண்டிகையின் போது ஏற்பட்ட நிறை குறைகளை பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகையை ஒட்டி 5ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், 7,471 சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதேபோல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் நிலையில், ஆம்னி பேருந்துகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறிய அமைச்சர், அதிக கட்டணம் வசூல் செய்த 10 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிலையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு, 16 இடங்களில் பேருந்து புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
குறிப்பாக முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், முன்பதிவு செய்யும் போதே இந்த 16 இடங்களில் ஒரு இடத்தை தேர்வு செய்ய முடியும் என்று கூறிய அமைச்சர், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு குறைந்தபட்சம் 6000 பயணிகள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக கூறிய அமைச்சர், பயணிகளை பாதிக்கும் வகையில் எந்த விலை ஏற்றமும் இருக்க கூடாது என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளோம் என்றார். அதிக கட்டணம் வசூலிப்பதற்கு தீபாவளிக்கு பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், வெற்றி பயண திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும், அரசு தேவையான நிதியை துறைக்கு வழங்குவதாக தெரிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்ட எந்த புள்ளி விவரங்களை அமைச்சர் அளிக்காமல், பின்பு தருகிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார். அதற்கு ஏன் புள்ளிவிவரங்களை அளிக்காமல் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் அமைச்சர் மழுப்பலாக பதில் அளித்தார்.
















