தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
எஸ்.ஐ.ஆர் குறித்த இண்டி கூட்டணியின் பொய் பிரசாரத்தை கண்டித்து ஜனநாயகத்தை காப்போம், தேச துரோகிகளின் ஆதிக்கத்தை ஒழிப்போம் என்ற தலைப்பில் வேலூரில் பாஜக சார்பில் தேசியக் கொடி பேரணி நடைபெற்றது.
இதில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பேரணியாக சென்றனர். மேலும், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக பேட்டியளித்த ஹெச்.ராஜா, தவெக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது என குற்றம்சாட்டினார். இந்து மதத்தை அவமானப்படுத்தும் வகையில் தவெக அரசின் நிர்வாகம் உள்ளது எனவும் தமிழ்நாடு கிறிஸ்தவ நாடாகிவிட்டது என்று நினைக்கிறார்கள் எனவும் அவர் கூறினார்.
















