பதக்கங்களை மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வென்றுள்ளதாக ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை பிரதமர் மோடி பாராட்டினார்.
ஜப்பானில் அண்மையில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 114 பதக்கங்களை வென்று அசத்தினர். பதக்க பட்டியலில் இந்தியா 4-ம் இடத்தையும் பிடித்தது. சாதித்த விளையாட்டு வீரர்களை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து கலந்துரையாடினார். இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்த பிரதமர் மோடி, அவர்களை பாராட்டினார்.
தொடந்து வீரர், வீராங்கனைகள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பதக்கங்களை மட்டுமின்றி கோடிக்கணக்கான மக்களின் இதயங்களையும் வீரர்கள் வென்றுள்ளதாகப் புகழாரம் சூட்டினார். 2010ஆம் ஆண்டு 14 பதக்கங்களை வென்ற இந்தியா, தற்போது 30 தங்கம் உட்பட 114 பதக்கங்களை வென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். உறுதியும் துணிச்சலும் இருந்தால் உயர்ந்த சிகரங்களை எட்ட முடியும் என்பதை பாரா வீரர்கள் நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா ஒரு முக்கிய விளையாட்டு சக்தியாக உருவெடுத்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
















