போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியது.
2011-15ம் ஆண்டில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பணி நியமனங்களுக்குப் பணம் பெற்றதாகச் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது செந்தில் பாலாஜி நேரில் ஆஜரானார்.
அப்போது, முதல்கட்டமாக 50 குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்குப் பென் டிரைவ் மூலம் 25 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.
அடுத்தகட்டமாக 51 முதல் 100 வரையிலான நபர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்க ஏதுவாக, விசாரணையை நவம்பர் 11-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
















