முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் நீதிமன்ற காவலை நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷ், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்பில் மகேஷ் ஜாமின் கோரிய மனுவை விசாரித்த சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், நவம்பர் 10ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தது.
இந்நிலையில், நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் அன்பில் மகேஸ் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனை அடுத்து, அன்பில் மகேஸின் நீதிமன்ற காவலை நவம்பர் 18ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
















