சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி உட்பட 8 மீதான குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வழக்கில் கைதான நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த வாக்குமூலம், குற்றம் தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள், காவல் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட பணம், தங்கம் தொடர்பாக ஆயிரத்து 400 பக்கங்களுக்கு மேல் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஐபிஎஸ் அதிகாரிகள், டிஎஸ்பிக்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாகவும், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், காவல் அதிகாரிகளுக்கு சிக்கல் நேரிடும் எனவும் தெரிகிறது.
இதனால், தங்களின் பெயர்களை நீக்க வேண்டும் என மூத்த ஐபிஎஸ் அதிகாரி வாயிலாக முதலமைச்சர் விஜய்க்கு காவல் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் நடத்தவுள்ள ஆய்வு கூட்டத்தில், முடிவு எடுக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
















