நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சீனாவுக்கான இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 40 சதவீதம் அதிகரித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் பிசிபி எனும் ‘பிரின்டட் சர்க்யூட் போர்டுகள்’ ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்ததன் வாயிலாக, சீனாவுடனான வர்த்தகம் சுமார் 30 ஆயிரத்து 210 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் – ஆகஸ்ட் காலகட்டத்திலும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 15 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இதை தவிர்த்து இயந்திரங்கள், ஆட்டோ உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொறியியல் பொருட்களின் ஏற்றுமதியும் இதே காலகட்டத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
அமெரிக்காவின் வரி கொள்கை மாற்றங்கள் மற்றும் இந்த திடீர் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை இருநாட்டு பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என்று ஏற்றுமதியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
















