ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதன் முதல் நாளில் இந்திய வீரர்கள் 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணியில் ருத்ரன்ஷ் பாட்டீல், திவ்யன்ஷ் பன்வார் மற்றும் ஐஸ்வரி தோமர் ஆகியோர் பங்குபெற்றனர். இதில் மூவரும் இணைந்து 1893.7 புள்ளிகள் பெற்று இந்திய அணிக்கு தங்க பதக்கத்தை வாங்கி கொடுத்தனர். இது இந்தியா வீரர்களின் புதிய சாதனையாகவும் மாறியுள்ளது.
இதுவரை 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகளில் உலகா சாம்பியன்ஷிப் தொடரின் போது சீனாவின் 1893.3 புள்ளிகளே அதிக புள்ளிகள் என்ற சாதனையாக இருந்தது. அதனை இந்திய அணி வீரர்கள் 1893.7 புள்ளிகள் பெற்று சீனாவின் சாதனையை முறியடித்துள்ளனர். இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா முதல் தங்கத்தை வென்றுள்ளது.