ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 50 ரன்களை எடுத்த இந்திய வீரர்கள் யார்யார் என்பதை பார்ப்போம்.
இதில் முதலிடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர். இவர் பேட்டிங் வரிசையில் மிகவும் பின்தங்கிருந்தவர். 2000 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே இந்திய சுற்றுப் பயணத்தின் 5வது ஒருநாள் போட்டியில் 44 வது ஓவரில் களமிறங்கிய அஜித் அகர்கர் 21 பந்துகளில் 50 ரன்களை எடுத்து சாதனை படைத்தார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் கபில் தேவ். இவர் 1983 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார்.
மூன்றாவது இடத்தில் இருப்பார் இந்தியாவின் தலைசிறந்த வீரரான ராகுல் டிராவிட். 2003 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார்.
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முறை 300 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்னான வீரேந்திர சேவாக். 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கென்யாவிற்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 50 ரன்களை எடுத்து அசத்தினார்.
அடுத்ததாக 5 ஆம் இடத்தில் இருப்பவர் 6 பந்துகளில் 6 சிக்சர்களை அடித்த யுவராஜ் சிங். 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளதேசத்திற்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார்.
இந்த பட்டியலில் 6 வது இடத்தில இருப்பவர் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 24 பந்துகளில் அரைசதம் எடுத்து சாதனை படைத்தார்.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பவர் இந்திய பேட்ஸ்மேன் க்ருணால் பாண்டியா. 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார்