அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் ஆண்டோனியோ குட்டரெஸ் மற்றும் பொது சபையின் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சென்றிருக்கிறார். அவர், ஐ.நா. பொதுச் செயலர் ஆண்டோனியோ குட்டரெஸை சந்தித்தார். அப்போது, இருவரும் இந்தியாவின் ஜி 20 தலைமைப் பதவி, நிலையான வளர்ச்சி இலக்குகள் (எஸ்.டி.ஜி.க்கள்) நிகழ்ச்சி நிரல் மற்றும் சீர்திருத்தம் குறித்து விவாதித்தனர். மேலும், அமைச்சர் ஜெய்சங்கரும் ஐ.நா. பொதுச் செயலாளரும் உக்ரைன் போர் மற்றும் கருங்கடல் தானிய முன்முயற்சி பற்றி விவாதித்ததாகவும் தெரியவருகிறது.
இச்சந்திப்புக்குப் பிறகு தனது எக்ஸ் பக்கத்தில் ஜெய்சங்கர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை வலுப்படுத்துவதற்கு எவ்வாறு பங்களித்தது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்தாண்டு இந்த விஷயத்தில் நாங்கள் நெருக்கமாக ஒருங்கிணைத்துள்ளோம். சர்வதேச நிதி நிறுவனங்களைச் சீர்திருத்த ஐ.நா. பொதுச் செயலாளரின் வலுவான அர்ப்பணிப்பைப் பாராட்டுகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
Pleasure to meet with UN Secretary General @antonioguterres at UN Headquarters.
Discussed how India’s G20 Presidency has contributed to strengthening @UN’s sustainable development agenda. We have coordinated closely in this regard over the last year.
Appreciate UNSG’s strong… pic.twitter.com/nZnapCF2JW
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 25, 2023
அதேபோல, அமைச்சர் ஜெய்சங்கர், ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸையும் சந்தித்தார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில் அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டிருக்கும் பதிவில், “இன்றைய காலைப்பொழுது ஐ.நா. தலைமையகத்தில் அதன் பொதுச் சபைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸுடனான சந்திப்புடன் தொடங்கியது. இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் முடிவுகளை அவர் பாராட்டியதோடு, வரவேற்பும் தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையின் சொற்பொழிவு மற்றும் விவாதங்களுக்கு இது பங்களிக்கும் என்று நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.
Began the morning by meeting @UN_PGA Dennis Francis at UN Headquarters.
Welcomed his appreciation of the outcomes of India’s G20 Presidency. Confident that it would contribute to the UN General Assembly’s discourse and deliberations.
Agreed on the importance of reforming… pic.twitter.com/FwDn9FJe4m
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 25, 2023