ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஸ்குவாஷ் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
சீனாவில் ஹாங்சோ நகரில் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஸ்குவாஷ் பிரிவில் இன்று இந்தியா மற்றும் சிங்கப்பூர் அணிகள் விளையாடின.
இதில் இந்திய அணியில் ஹரிந்தர் பால், சவுரவ் கோசல் மற்றும் அபய் சிங் ஆகியோர் பங்குபெற்றனர்.
ஹரிந்தர் பால் தொடக்க ஒற்றையர் ஆட்டத்தில் நீண்ட நேரம் போராடி 11-4, 13-11, 8-11, 7-11 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஜெரோம் கிளமெண்ணை தோற்கடித்தார்.
இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை வீரரும், ஆறு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாடிய மூத்த வீரருமான சவுரவ் கோசல், 37 நிமிடங்களில் 11-9, 11-1, 11-4 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வீரர் சாமுவேல் காங்யை வீழ்த்தினார்.
அடுத்ததாக விளையாடிய அபய் சிங் தன்னுடைய ஆட்டத்தை எளிதாக மாற்றி 11-7, 11-7, 11-7 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வீரர் மார்கஸ் புவாவை தோற்கடித்தார்.
இதனால் ஆட்ட முடிவில் இந்திய அணி ஸ்குவாஷ் பிரிவில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.